போதைப்பொருள் வைத்திருந்ததாக ஸ்ரீ பெட்டாலிங்கில் இரு இந்திய ஆடவர்களைக் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 29-

கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப்பிரிவினர், இம்மாதம் 23ஆம் தேதி பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள அடுக்குமாடி சொகுசுக் குடியிருப்பில் மின் தூக்கியில் இரு இந்திய ஆடவர்களைக் கைது செய்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ கௌள கொக் சின் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்கள் 21, 25 வயதுடையவர்கள் ஆவர். இவர்களில் ஒருவரிடம் இருந்த ஒரு பையில் இருந்து 4 பொட்டலங்களில் ஷாபு எனும் போதைப்பொருளும் 6 பொட்டலங்களில் ஹெரோயின் எனும் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டன.

மற்றவரின் பையிலிருந்து 1 பொட்டலத்தில் ஷாபுவும் ஹெரோயின் 4 பொட்டலங்களிலும் இருந்ததாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் 100 பொட்டலங்களில் ஷாபுவும் 15 பொட்டலங்களில் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த எடை 124 கிலோ கிராம்.

ஷாபு எனும் போதைப்பொருள் 21 கிலோ கிராம். அதன் மதிப்பு வெ.41லட்சத்து 80ஆயிரம் என்று அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 7 லட்சத்து 28ஆயிரம் பேர் உபயோகிக்கக்கூடியது. மேலும் கைது செய்யப்பட்ட 25 வயது நபர் தன் வீட்டில் போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதற்கு அவருக்கு மாதம் 5,000 வெள்ளி வருமானம் கிடைத்ததாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் தேடி வருவதாக டத்தோஸ்ரீ கௌ தெரிவித்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *