கிளினிக்குகளில் சேவை நேரம் நீட்டிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 11-

சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் 43 கிளினிக்குகளில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் கடந்தாண்டில் 592,966 நோயாளிகள் பலனடைந்தனர். இத்திட்டத்தின்கீழ், அரசாங்க மருத்துவமனைகளின் ஆபத்து அவசரப் பிரிவுகளில் நிலவும் நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் அருகில் உள்ள கிளினிக்குகளுக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டனர்.

நாளொன்றுக்கு 47 முதல் 50 நோயாளிகள் வரை அங்கு அனுப்பப்பட்டனர் என்று சுகாதாரத்துறை துணையமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சவுனி நேற்று மக்களவையில் தெரிவித்தார். கிளினிக்குகளில் வேலை நாட்களுக்கான சேவை நேரம் மாலை 5மணியிலிருந்து இரவு 9.30மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 1 மணிவரை கிளினிக்குகள் திறந்திருக்கும் என்றார்.

கடந்த 2023ஆம் ஆண்டில், 49 கிளினிக்குகளில் ஆறு கிளினிக்குகள் இந்தப் பொதுத்துறை சீர்திருத்த முன்னோடித் திட்டத்திற்குச் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில், அந்த ஆறு கிளினிக்குகளும் தங்களின் சேவை நேரத்தை ஞாயிற்றுக் கிழமைகளிலும் பொதுவிடுமுறை நாட்களிலும் காலை 9மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நீட்டித்தன என்று அவர் கூறினார்.

Sebanyak 592,966 pesakit mendapat manfaat daripada lanjutan waktu operasi di 43 klinik KKM. Ini membantu mengurangkan kesesakan di jabatan kecemasan hospital kerajaan. Klinik beroperasi hingga 9.30 malam pada hari bekerja dan dibuka pada hujung minggu serta cuti umum di beberapa lokasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *