50 மில்லியன் கடன் உதவி! – BANK RAKYAT க்கு நன்றி - Datuk R.Ramanan

top-news
FREE WEBSITE AD

தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின் மூலமாக இந்தியர்கள் தொழில்துறையிலும் வணிகத் துறையிலும் ஈடுபட பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில் மலேசியாவின் முன்னனி வங்கியான BANK RAKYAT இந்தியத் தொழில்முனைவோர்களுக்கு 50 மில்லியன் கடனுதவியை வழங்க முன்வந்துள்ளது நன்றிக்குரியது என தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் Datuk R.Ramanan தெரிவித்தார்.

 தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின்  PERUSAHAAN MIKRO, KECIL DAN SEDERHANA  (PMKS) இன் வாயிலாக சிறு குறு இந்திய வணிகர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வணிக மூலதனத்திற்கு இந்த 50 மில்லியன் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என துணை அமைச்சர் Datuk R.Ramanan தெரிவித்தார்.

 இத்திட்டத்தின் வாயிலாக 1,000 முதல் 50,000 வரையில் முதல் கட்ட கடனுதவிகளைப் பெற முடியும் என Datuk R.Ramanan நம்பிக்கை அளித்தார். இன்று Menara Berkembar Bank Rakyat அரங்கத்தில் BRIEF-i எனும் இத்திட்டத்தின் தொடக்க விழாவில் Bank Rakyat வங்கி மேலாளர் Datuk Dr Mohammad Hanis Osman Bank Rakyat வங்கியின் தலைமை நிர்வாகி Datuk Mohd Irwan Mohd Mubarak ஆகியோர் முன்னிலையில் இந்தியர்களுக்கான 50 மில்லியன் கடனுதவி திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *