30,000 மலேசியர்களில் ஒருவர் HEMOFILIA நோயால் பாதிப்பு! – YB Young Syefura Othman!

top-news

நவம்பர் 5,

அரிதான நோயாகக் கருதப்படும் HEMOFILIA நோயால் 30,000 மலேசியர்களில் ஒருவர் பாதிக்கப்படுவதாகப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் Young Syefura Othman தெரிவித்தார். அவர்களின் மருத்துவச் செலவீனங்களை ஈடுகட்ட பட்ஜெட்டில் 25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுகாதாரச் சிறப்புப் பணிக்குழுவின் உறுப்பினரான யாங் சபூரா ஒத்மான் தெரிவித்தார்.  25 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி ஹெமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்க மட்டுமல்லாது ஹெமோபிலியா நோய் தொற்றுக்கானப் பரிசோதனைக்கும் பயன்படுத்தபட வேண்டும் என யாங் சபூரா வலியுறுத்தினார். 

HEMOFILIA நோய் தலைமுறைகள் கடந்து பரவும் நோய் என்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் சிறு வயதிலேயே இரத்தப்போக்கு உறைவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக யாங் சபூரா தெரிவித்தார். அருகிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் அரசு கிளினிக்களிலும் தங்கள் பிள்ளைகளுக்கு ஹெமோபிலியா நோய்க்கானப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி யாங் சபூரா வலியுறுத்தினார்.

YB Young Syefura Othman menyatakan satu daripada 30,000 rakyat Malaysia menghidap hemofilia. Dana RM25 juta dalam Belanjawan 2025 diperuntukkan untuk rawatan dan saringan penyakit ini di hospital awam serta klinik kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *