கேபிள் திருட்டு தொடர்பாக டிரான்சிட் ரயில் சேவைகளில் பெரும் இடையூறு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 9:

கேபிள் திருட்டு தொடர்பான தொடர்ச்சியான நாசவேலை செயல்களைத் தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு நிறுவனமான ERL Sdn Bhd அதன் KLIA Ekspres மற்றும் KLIA டிரான்சிட் ரயில் சேவைகளில் பெரும் இடையூறுகளைச் சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பண்டார்  தாசே செலாத்தான்  நிலையத்தில் நேற்று ரயில் சிக்னலிங் அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் சேவைகளையும் பாதித்ததாக ERL தெரிவித்துள்ளது.முழு சேவையையும் மீட்டெடுக்க தங்கள் குழு 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த இடையூறுகள் தங்கள் பயணிகளுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை தாங்கள் புரிந்துகொள்வதாகவும், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்  அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதல் கேபிள் துண்டிப்பு சம்பவம் நேற்று காலை 6.20 மணியளவில் சலாக் திங்கி நிலையத்திற்கும் KLIA முனையம் 1 க்கும் இடையில் Km48.5 இல் நடந்ததாக ERL தெரிவித்துள்ளது.புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா மற்றும் சலாக் திங்கி நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை 5.52 மணிக்கு கிமீ 43.1 இல் இரண்டாவது கேபிள் வெட்டு ஏற்பட்டது, இதன் விளைவாக வருகை நேரத்தில் ஏழு முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமானது.

இன்று அதிகாலை 4.47 மணிக்கு சாலாக் திங்கி நிலையத்திற்கும் KLIA முனையம் 1 க்கும் இடையில் Km47.2 இல் மூன்றாவது கேபிள் வெட்டு நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தடைகளால் பாதிக்கப்பட்ட பயணிகள் அவர்களுக்குரிய பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று ERL தெரிவித்துள்ளது.

ERL menyatakan perkhidmatan KLIA Ekspres dan Transit terganggu akibat kecurian kabel berulang. Tiga insiden berlaku dalam tempoh 24 jam, menjejaskan operasi dan menyebabkan kelewatan. ERL mohon maaf dan menawarkan bayaran balik kepada penumpang yang terjejas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *