அமெரிக்காவின் வரி விதிப்பு... சிறப்பு அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப மலேசியா முடிவு

- Shan Siva
- 08 Apr, 2025
கோலாலம்பூர்: மலேசிய இறக்குமதிகள் மீது அமெரிக்காவால் சமீபத்தில் விதிக்கப்பட்ட 24% வரி குறித்து விவாதிக்க மலேசியா, அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான மலேசியாவின் வர்த்தகம் நீண்டகாலமாக பரஸ்பர ஆதாயத்தின் மாதிரியாக இருந்து வருகிறது. அதன் ஏற்றுமதிகள் மலேசியாவின் வளர்ச்சி மற்றும் அமெரிக்கா முழுவதும் உயர்தர வேலைகளை ஆதரிக்கின்றன என்றார்.
ஆனால், மலேசியா-அமெரிக்காவுடனான வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் சிறப்பாக சேவை செய்திருந்தாலும், இந்த வரிவிதிப்பு இரு பொருளாதாரங்களிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
அமைதியான அமர்வின் மூலம் நமது இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக, உரையாடல் செயல்முறையைத் தொடங்க நமது அதிகாரிகளை வாஷிங்டனுக்கு அனுப்புவோம் என்று அவர் கூறினார்!
PM Anwar Ibrahim umum Malaysia akan hantar pegawai ke AS bincang cukai 24% ke atas import. Hubungan dagang dua hala dikatakan saling menguntungkan, namun cukai ini boleh beri kesan negatif kepada ekonomi kedua-dua negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *