அமெரிக்கா மீது மலேசியா 47 விழுக்காடு வரி விதிப்பா?!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு, மலேசியா 47 விழுக்காடு வரி விதித்துள்ளதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது, விதிக்கப்படும் சராசரி வரி விகிதம் 5.6 விழுக்காடு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற அமெரிக்கா அறிவித்திருக்கும் வரிவிதிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில்  முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது, அண்மைய வரி விதிப்பு அறிவிப்பின்போது கூறிய 24 விழுக்காடு வரி விகிதம் குறித்து விளக்கம் பெறுவதற்காக, மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர், எட்கர் டி காகனையும் தாம் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்!

Kerajaan Malaysia menafikan dakwaan Amerika mengenai cukai 47% terhadap barangan import dari AS, menyatakan kadar cukai purata hanya 5.6%. Menteri Tengku Zafrul juga mengesahkan pertemuan dengan Duta AS, Edgard Kagan, untuk membincangkan perkara tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *