மியன்மாரில் கள மருத்துவமனை அமைப்பதற்கான கோரிக்கையை மலேசியா பரிசீலிக்கும்!

- Muthu Kumar
- 08 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 8-
மார்ச் 28ஆம் தேதி நிகழ்ந்த மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மியன்மாரில் ஒரு கள மருத்துவமனையை அமைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள ஒரு கோரிக்கையை மலேசியா பரிசீலிக்கும்.
பரிசீலிக்கப்படுவதற்காக இக்கோரிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
“ஆசியான் தலைவர் எனும் முறையில், மியன்மாருக்கு வழங்கப்பட வேண்டிய உதவியை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை மலேசியா ஏற்றுக் கொள்கிறது" என்று ஜொகூரில் உள்ள தமது கோத்தா திங்கி
நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடந்த நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் பேசும்போது அவர் தெரிவித்தார்.ரிக்டர் அளவைக் கருவியில் 7.7 மற்றும் 6.4ஆகப் பதிவான அந்த இரண்டு நிலநடுக்கத்தில், இதுவரையில் 3,514 பேர் பலியாகி இருக்கின்றனர்.
பெரும்பாலான இறப்புகள் மண்டாலே எனும் நகரில் ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரையில் 2,100 பேர் பலியாகி இருக்கின்றனர். அந்நகரில் 80 விழுக்காடு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.கடும் மழை, அவ்வப்போது ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் மற்றும் இணையத் தொடர்பு துண்டிப்பு ஆகிய காரணங்களினால் அங்கு மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Malaysia sedang pertimbang permintaan bina hospital medan di Myanmar selepas gempa bumi kuat pada 28 Mac. Permintaan itu akan dibawa ke mesyuarat Kabinet. Seramai 3,514 orang terkorban, termasuk 2,100 di Mandalay, akibat bangunan runtuh dan bencana susulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *