ஜொகூர் வெள்ளத்தில் 326 பேர் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
ஜொகூரின் BATU PAHAT பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இது வரை 326 பேர் பதிக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில வெள்ள நிவாரண ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. திடீர் கனமழையால் இந்த வெள்ளத்தில் BATU PAHAT பகுதியில் உள்ள 2 கிராமங்களைச் சேர்ந்த 108 குடும்பங்களை வீடுகளை இழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sungai Batu Pahat ஆற்றில் நீரின் அளவு 2.30 மீட்டர் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் Sungai Senggarang ஆற்றில் 3.35 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகவும் அருகில் உள்ள Kampung Baharu குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் 108 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேரையும் தற்காலிகமாக SMK Seri Gading மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seramai 326 orang dari 108 keluarga di dua kampung di Batu Pahat, Johor, terjejas akibat banjir kilat. Mereka kini ditempatkan sementara di dewan SMK Seri Gading. Paras air Sungai Batu Pahat dan Sungai Senggarang meningkat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *