வாகனத்திலேயே வணிகம் செய்த வெளிநாட்டினர்! DBKL நடவடிக்கை!

top-news

ஏப்ரல் 7,

தலைநகரில் உள்ள முதன்மை சாலைகளின் வாகனம் நிறுத்துமிடத்தில் வணிகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் Jalan Tun Tan Siew Sin, Jalan Silang , Jalan Leboh Pudu ஆகிய சாலைகளில் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக DBKL தெரிவித்துள்ளது.

சுமார் 8 வணிகக் கூடாரங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் வாகனத்தின் பின்னால் பொருள்களை வைத்து மலிவு விலையில் வணிகம் செய்த வெளிநாட்டினர்களைத் தடுத்து வைத்திருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL தெரிவித்தது. பறமுதல் செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் செராஸில் உள்ள DBKL பொருள் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL telah mengambil tindakan terhadap warga asing yang menjalankan perniagaan dari kenderaan di lokasi parkir utama di Kuala Lumpur. Lapan gerai dirampas di sekitar Jalan Tun Tan Siew Sin, Jalan Silang, dan Jalan Leboh Pudu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *