பொது இடத்தை ஆக்கிரமித்த 35 வணிகத் தளங்களை அப்புறப்படுத்திய DBKL!
- Sangeetha K Loganathan
- 14 Nov, 2024
நவம்பர் 14,
அரசு இடங்களையும் நடைப்பாதைகளையும் பொது இடங்களையும் ஆக்கிரமித்து வணிகத்தளங்களை அமைத்திருந்த 35 வணிகத்தளங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அப்புறப்படுத்தியது.
Titiwangsa, Desa Pandan, Jalan Kampung Pandan, Jalan Raja Muda Musa, Jalan Maktab, Jalan Mayang Sari என தொடர் பகுதிகளில் அனுமதியின்றி இரவு கடைகளை அமைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய வணிகத்தளங்களை முற்றிலும் அகற்றியதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை அபராதத்தொகையைச் செலுத்தி மீட்டுக் கொள்ளும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட வணிகர்களுக்கு வலியுறுத்தியது.
DBKL melaksanakan tindakan sitaan dan pindah halangan perniagaan di beberapa kawasan di Parlimen Titiwangsa untuk memastikan kawasan awam teratur. Barangan seperti kerusi dan kanopi disita dan dihantar ke stor DBKL.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *