வரி செலுத்தாத 27 வளாகங்களை மூடிய DBKL!
- Sangeetha K Loganathan
- 17 Nov, 2024
தலைநகரில் இயங்கி வரும் முக்கிய வளாகங்கள் பல ஆண்டுகள் வரி செலுத்தாமல் இருப்பதைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதற்கட்டமாக 27 வளாகங்களை மூடியது.
தலைநகரின் BANDAR TUN RAZAK பகுதியில் உள்ள 3 மாடி, 4 மாடி வளாகங்கள் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்ததாகவும் பல முறை காலக்கெடு வழங்கியும் நோட்டிஸ் வழங்கியும் எந்தவோர் நடவடிக்கையில்லாமல் வணிகத்தை நடத்திய 27 வளாகங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பொருள்களுடன் மூடியது. சம்மந்தப்பட்ட 27 வணிகத்தளங்களின் மொத்த வரி நிலுவைத் தொகை RM600,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
வணிக உரிமையாளர்களும் குத்தகையாளர்களும் உரிமம் பெற்றிருந்து வணிகம் நடத்தினாலும், ஆண்டும் வரியையும் வணிக வரியையும் கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் வலியுறுத்தியது.
DBKL menjalankan Operasi Sita di Parlimen Bandar Tun Razak terhadap 27 premis dengan hutang cukai taksiran lebih RM600,000. Sita dilakukan mengikut Akta 171, termasuk langkah menahan dan menjual pegangan jika pembayaran gagal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *