தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படாது! - உள்துறை அமைச்சு திட்டவட்டம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, நவம்பர் 15: 1948 ஆம் ஆண்டின்‌ தேச நிந்தனைச்‌ சட்டத்தில்‌ திருத்தம்‌ செய்வதற்கோ ரத்துசெய்வதற்கோ அரசாங்கம்‌ திட்டமிடவில்லைஎன்று உள்துறை துணையமைச்சர்‌ டத்தோஸ்ரீ டாக்டர்‌ ஷம்சுல்‌ அனுவார்‌ நசாரா நேற்று மக்களவையில்‌ தெரிவித்தார்‌.

அமைச்சு நடத்திய ஆய்வைத்‌ அடுத்து அச்சட்டத்தைத்‌ தொடர்ந்து பேணி வருவதற்கு அரசாங்கம்‌ முடிவுசெய்துள்ளதுஎன்று அவர்‌ குறிப்பிட்டார்‌. காலத்திற்கு  ஏற்றவகையிலும்‌ இலக்கவியலின்‌ எழுச்சிக்கு உகந்த வகையிலும்‌ தேச  நிந்தனைச்‌ சட்டத்தில்‌ திருத்தங்களைக்‌ : கொண்டுவருவதா அல்லது  3ஆர்‌ எனப்படும்‌ இனம்‌, சமயம்‌, அரச குடும்பம்‌ தொடர்பான விவகாரங்களைக்‌ களைய புதிய சட்டத்தை இயற்றுவதா என்பது குறித்து உள்துறை அமைச்சு ஆய்வு நடத்தியது என்று அவர்‌ குறிப்பிட்டார்‌.

அந்த ஆய்வைத்‌ தொடர்ந்து அவ்விவகாரம்‌ மீதான கொள்கைத்‌ தீர்மானமொன்றை அமைச்சரவையிடம்‌ உள்துறை அமைச்சு சமர்ப்பித்தது. தேசியப்‌ பாதுகாப்பு மசோதாவை வரைவதற்கு தேசியப்‌ பாதுகாப்பு மன்றம்‌ ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்‌ என்று கொள்கையளவில்‌ அமைச்சரவை இணக்கம்‌ தெரிவித்தது. முடியாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம்‌ மற்றும்‌ சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம்‌ உள்ளிட்ட மிரட்டல்களிலிருந்து நாட்டைப்‌ பாதுகாக்க அந்த மசோதா வகை செய்யும்‌ என்றார்‌ ஷம்சுல்‌.  1948ஆம்‌ ஆண்டு தேச நிந்தனைச்‌ சட்டத்தைப்‌ பொறுத்தமட்டில்‌, பொது ஒழுங்கையும்‌. தேசியப்‌ பாதுகாப்பையும்‌ கட்டிக்‌ காப்பதற்காக அச்சட்டம்‌ தொடர்ந்து நடப்பில்‌ இருந்துவரும்‌ என்று அவர்‌ கூறினார்‌. 

அரச குடும்ப விவகாரங்களுடன்‌ சம்பந்தப்படும்‌ பிரச்சினைகளைக்‌ கையாள்வதற்கு மட்டும்‌ தேசநிந்தனைச்‌ சட்டத்தில்‌ திருத்தம்‌ செய்ய அரசாங்கம்‌ திட்டமிட்டுள்ளதா என்று பக்காத்தான்‌ ஹராப்பானின்‌ பண்டார்‌ கூச்சிங்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌ கெல்வின்‌ யீ கேட்டதற்கு ஷம்சுல்‌ அந்த விளக்கத்தை அளித்தார்‌.

அவ்வாறு திருத்தப்படவுள்ள சட்டம்‌ இதர விவகாரங்களுக்கும்‌ தவறாகப்‌ பயன்படுத்தப்படுமா என்றும்‌ கெல்வின்‌ வினவியிருந்தார்‌.  பேச்சுரிமையைக்‌ கட்டுப்படுத்துவதற்கும்‌ அரசாங்கத்தை குறைகூறுவதிலிருந்து மக்களைத்‌ தடுப்பதற்கும்‌ தேசிய நிந்தனைச்‌ சட்டத்தில்‌ திருத்தம்‌ செய்யப்படுகிறது என்று கூறப்படுவதையும்‌ ஷம்சுல்‌ நிராகரித்தார்‌!               

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *