தாய்-மலேசிய எல்லைச் சுவர் திட்டத்திற்கு வெ.44 கோடிக்கு மேல் செலவாகும்!
- Muthu Kumar
- 18 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 18-
மலேசியா-தாய்லாந்து எல்லை நெடுகிலும் எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு44 கோடியே 57 லட்சத்து 48 ஆயிரம் வெள்ளி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, கிளந்தான் மந்திரி பெசார் நசுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.
அச்சுவரைக் கட்டுவது தொடர்பிலான பரிந்துரையில், நிலத்தைக் கொள்முதல் செய்வதிலும் அதிக பணம் செலவிட வேண்டி வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்திட்டப் பரிந்துரைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நசுருடின், அத்திட்டம் நீண்ட கால பலன்களைக் கொண்டிருப்பதாகவும் கிளந்தான் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆதரவும் அதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
“சுங்கை கோலோக்கின் 99 கிலோ மீட்டர் நெடுகிலும் ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்சினைகள் உட்பட எல்லை தாண்டிய குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களைக் கையாள்வதிலும் துடைத்தொழிப்பதிலும் கிளந்தான் ஈடுபட்டுள்ளது.“ஆதலால், எல்லை தாண்டிய குற்றச் செயல்கள் பரவுவதை தடுப்பது மற்றும் தேசிய களையச் செய்வதில் உதவும் என்று, நராதிவாட் மாநில ஆளுநர் திராகுல் தோத்தாம் அண்மையில் கூறியிருந்தார்.
இச்சுவரை அமைக்கும் பரிந்துரையை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாக, கிளந்தான் மாநில அரசாங்கம் இம்மாதம் 5ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், அத்திட்டம் இன்னமும் பரிந்துரை அளவிலேயே இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இம்மாதம் 11ஆம் தேதி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு நோக்கத்திற்காக, கிளந்தான்-தாய்லாந்து எல்லைச் சுவர் கட்டுமானத் திட்டம் மிக முக்கியமானது” என்று நசுருடின் தெரிவித்தார்.தாய்லாந்து அரசாங்கமும் இத்திட்டத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அத்தகைய சுவர், பல்வேறு எல்லை தாண்டிய குற்றச் செயல்களைக் இது குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தேசிய பாதுகாப்பு மன்றத்திடமே இருப்பதாகவும் சைஃபுடின் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *