13 இந்தோனேசிய ஆண்கள் கைது! – குடிநுழைவுத் துறை
- Sangeetha K Loganathan
- 15 Nov, 2024
நவம்பர் 15,
மலேசியவுக்குள் சுற்றுலா பயணிகளாக நுழைந்த 13 இந்தோனேசிய ஆண்கள் உணவுக் கடையில் வேலை செய்ததால் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.
முன்னதாகச் சம்மந்தப்பட்ட உணவகம் டிக் டோக் வலைத்தளத்தில் காணொலிகளைப் பதிவு செய்து உணவகத்திற்கு விளம்பரம் செய்த நிலையில், காணொலியில் பணியாளர்களாக இருந்த மலேசியர் அல்லாதவர்களை அடையாளம் கண்டு சோதனை நடத்தியதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 13 இந்தோனேசிய ஆண்களும் 20 முதல் 32 வயதினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைப் பணிக்கு அமர்த்திய உணவக உரிமையாளரை விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Jabatan Imigresen Johor menahan 13 warga asing, semua lelaki Indonesia berusia 20-32 tahun, kerana menyalahgunakan pas lawatan sosial untuk bekerja di premis makanan dalam serbuan Op Selera yang tular di TikTok.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *