2 நாள்கள் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுவன்! – LARKIN

top-news

நவம்பர் 17,


ஜொகூரில் உள்ள Jalan Padi Mahsuri, Larkin அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியின் முன் இருந்த கால்வாயில் தவறி விழுந்த 10 வயது சிறுவனின் உடல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாகச் சிறுவனின் உடல் தேடப்பட்டு வந்ததாகவும் கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டதாக Larkin, மாவட்ட மீட்பு படை இயக்குநர் Nordatul Badrol Abd Rahman தெரிவித்தார். 
கடந்த புதன் கிழமை மாலை 3.37 மணிக்கு நண்பர்களுடன் மழையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது 10 வயது சிறுவன் தவறி விழுந்ததாகவும் Sungai Danga ஆற்றில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Kanak-kanak lelaki 10 tahun yang dilaporkan hilang selepas tergelincir di tepi longkang di Bandar Baru Uda ditemui mati oleh bomba di tebing Sungai Danga, 3.7 km dari lokasi kejadian. Mangsa ditemui pada hari kedua operasi pencarian menggunakan bot.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *