MADANI அரசு மறந்த REFORMASI! கொள்கை மறந்த பக்காத்தான்! – PROF RAMASAMY சாடல்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 17,

மலேசியர்களிடையே REFORMASI எனும் தாரக மந்திரத்தை ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தது பக்கத்தான் கூட்டணி. அது மாற்றத்தை விரும்பிய பெரும்பாலான மலேசியர்களின் உயிர்நாடியானது. பலரின் மனதில் விதைக்கப்பட்ட REFORMASI, அறுவடை செய்யும் காலத்தில் அதை வேரோடு பிடுங்கிய கதையாகிவிட்டது என பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமானப் பேராசிரியர் Ramasamy தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் அட்சி என மடானி அரசு அமைந்தும் சீர்த்திருத்தங்கள் மறக்கப்பட்டதாகவும் அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் மடானி அரசு அரசியல் அதிகாரத்தைச் சுற்றியே சுழல்வதாக அவர் தெரிவித்தார்.மடானி அரசு படர்ந்த பெரும்பான்மை உள்ள நிலையில் கடைநிலை மக்களிடமிருந்து சீர்த்திருத்தங்களைத் தொடங்கும் வல்லமை இருந்தாலும் மடானி அரசை எது தடுக்கிறது எனும் கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

இனி இந்த நாட்டில் REFORMASI எனும் வார்த்தையை யாரேனும் உச்சரித்தால், அது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கும், அந்த வார்த்தை ஏற்படுத்திய உணர்ச்சி இனி இருக்காது. அதற்கான மகத்துவமும் இருக்காது என பேராசிரியர் ராமசாமி பதிவிட்டுள்ளார்.

Prof. Ramasamy mengkritik kerajaan MADANI kerana melupakan agenda Reformasi. Beliau menegaskan bahawa semangat perubahan yang diilhamkan oleh Pakatan kini hilang dan istilah tersebut telah menjadi slogan kosong tanpa makna.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *