வி.வி.ஐ.பிகளுக்குக் காவல்துறை அடிமை! – மகாதீர் சாடல்!

top-news

நவம்பர் 14,

வி.வி.ஐ.பியாக இருந்தாலும் சட்டதிற்கு உட்பட்டாக வேண்டும் என தேசிய காவல் படை தலைவர் Tan Sri Razarudin  Husain தெரிவிப்பதைத் தாம் முழுமையாக ஏற்பதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். காவல் துறை அபப்டி தான் இருக்கிறதா எனும் கேள்வியும் தனக்குள் இருப்பதாகவும் விவிஐபிகள் சொல்வதைச் செய்பவர்களாகக் காவல் துறையும் அதிகாரிகளும் இருப்பதை I.G.P ஆன Tan Sri Razarudin  Husain அறிந்திருக்க வேண்டும் என மகாதீர் தெரிவித்துள்ளார். 

இதுவரை பல விவிஐபிகளுக்குப் பாதுகாப்பாளராக மட்டுமே காவல் துறை செயல்படுவதாகவும் அந்த விவிஐபிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் வரையில் காவல் துறை அவர்களைச் சிறப்பாகக் கவனிக்கும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் காவல் துறையின் மறுமுகம் வெளிவரும், இது தான் காவல் துறையாக இப்போது இருக்கிறது என மகாதீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

காவல் துறை கட்டுப்பட வேண்டியது அரசாங்கத்திற்கு அல்ல, சட்டத்திற்குத் தான் என்பதைக் காவல் துறை மறந்து பல ஆண்டுகளாகிவிட்டதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

Mahathir menyatakan polis harus patuh pada undang-undang, bukan kerajaan. Beliau mengkritik bahawa polis sering melindungi VIP pro-kerajaan dan bertindak berbeza terhadap yang menentang kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *