எலி கழிவுகள் கொண்ட உணவகம் மூடப்பட்டது! – பினாங்கு நகராண்மைக் கழகம்!

top-news

நவம்பர் 15

பினாங்கில் உள்ள உணவகத்தில் எலிகள் சுற்றித் திரிவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட உணவகத்தையும் அதன் அருகில் செயல்பட்டு வந்த கடையையும் பினாங்கு நகராண்மைக் கழகம் நேற்று 14 நாள்களுக்கு மூடும்படி உத்தரவிட்டது. 

சம்மந்தப்பட்ட உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைப் பினாங்கு மாநிலச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் உடனடியாகச் சம்மந்தப்பட்ட உணவகத்தை மூடும்படியும் உணவக உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

சம்மந்தப்பட்ட உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் உணவகத்தின் சமையலறையும் சமையல் பொருள்களும் சுகாதாரச் சட்டங்களை மீறியிருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு நகராண்மைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

MBPP mengarahkan dua premis makanan di Daerah Barat Daya ditutup 14 hari selepas penemuan najis tikus dan dapur kotor. Pengusaha diberi penerangan mengenai piawaian kebersihan PBT.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *