கோல சிலாங்கூர், தஞ்சோங் கிராமாட் பாலத்தின் மண் அரிப்புக்கு விரைவில் தீர்வு!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

கோல சிலாங்கூர் நவ.20-

கோல சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள தஞ்சோங் கிராமாட் பகுதியில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரதான கால்வாயை இணைக்கும் பாலத்தை ஒட்டியுள்ள நிலப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அதன் சீரமைப்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என்று நகராண்மைக் கழக உறுப்பினர் அருள் செல்வி நாதன் தெரிவித்தார்.

இப்பகுதியில் குடியிருப்போர் சிலர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கோல சிலாங்கூர் வடிகால் நீர் பாசன இலாகா அதிகாரி அஸ்மான் என்பவரை தாம் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியதாக அவர் கூறினார். நேற்று காலையில், அதன் இலாகா பணியாளர்கள் இருவர் நேரில் சென்று நிலவரத்தைக் கண்டறிந்ததாக அருள் செல்வி தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக இவ்வட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்ட நிலையில் சாலையின் ஒரு பகுதி தற்காலிக மாக மூடப்பட்டிருப்பதோடு மறுபகுதி சாலை இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பாலத்தின் அருகில் இருபுறமும் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் இச் சாலையைப் பயன்படுத்துவோர் மிகுந்த கவனமுடன் பயணிக்கும்படி அருள் செல்வி ஆலோசனை விடுத்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *