அந்நியத் தொழிலாளர்கள் கோட்டா - எம்ஏசிசி விசாரணையில் நிறுவன பெண் இயக்குனர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 15

இல்லாத ஒரு திட்டத்திற்கு, அந்நியத் தொழிலாளர்கள் தேவை என்று கூறி செய்யப்பட்டிருந்த ஒரு விண்ணப்பம் தொடர்பில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றொரு சந்தேகப்பேர்வழியை கைது செய்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பெண் இயக்குநரான 40 வயதுடைய அச்சந்தேகப்பேர்வழி, கடந்த 2023ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தில் சதி செய்ததாக நம்பப்படுகிறது என்று, எம்ஏசிசி வட்டாரம் ஒன்று கூறியது.

"தமது வாக்குமூலத்தை அளிப்பதற்காக, சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்தபோது, அவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணி வாக்கில் கைது செய்யப்பட்டார்" என்று அவ்வட்டாரம் தெரிவித்தது. அப்பெண் இயக்குநரை ஐந்து
நாட்களுக்குத் தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்டிரேட் வான் நோரா நிசா ஙாடிரின் நேற்று வெளியிட்டதாகவும் அவ்வட்டாரம் கூறியது.

அவரின் கைதை நேற்று உறுதிப்படுத்திய சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் அலியாஸ் சலிம், 2009 ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் செக்ஷன் 18இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.இதே சம்பவம் தொடர்பில், எம்ஏசிசியினால், "டத்தோ" பட்டம் கொண்ட ஒரு நிறுவனத்தின் வங்காளதேச இயக்குநர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இல்லாத ஒரு திட்டத்திற்காக மொத்தம் 600 அந்நியத் தொழிலாளர்கள் தேவை என்று கோரி, 40 வயதுடைய அந்த வங்காளதேச "டத்தோ" இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாக, எம்ஏசிசி வட்டாரம் ஒன்று கூறி அந்த இரண்டு விண்ணப்பங்களும், தலைக் கட்டணமாக (லெவி) தலா 460,000 வெள்ளி மற்றும் 650,000 வெள்ளி கட்டணம் சம்பந்தப்பட்டவை என்று அவ்வட்டாரம் தெரிவித்திருந்தது.

சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் அவனிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு கைது செய்யப்பட்டு இம்மாதம் 17ஆம் தேதி வரையில் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். அச்சந்தேகப்பேர்வழி, கடந்த 2023ஆம் ஆண்டு வாக்கில் அவ்விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவ்வட்டாரம் கூறியிருந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *