RM 6 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளைக் காவல்துறை பறிமுதல் செய்தனர்!
- Sangeetha K Loganathan
- 19 Nov, 2024
நவம்பர் 19,
போதைப்பொருள் கடத்தும் கும்பல் போதைப்பொருள்களை இடம் மாற்றுவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்டையில் சந்தேகத்திற்குரிய Toyota Vellfire ரக வாகனத்தைக் திரங்கானு மாநிலப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துரத்தியதாகவும் விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்த சந்தேக நபர்கள் தப்பியதால் வாகனத்தில் இருந்த 200 கிலோ SYABU போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் திரங்கானு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் உள்ள கைரேகைகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியைக் காவல் துறையினர் முழுமையாகச் சோதனையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட கும்பலை 3 மாதங்களாகப் பின் தொடர்ந்து வந்துள்ள நிலையில் அவர்களின் அடையாளங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அவர்களை விரைவில் கைது செய்ய கிளாந்தான் காவல்துறையினரும் திரங்கானு காவல்துறையினரும் சேர்ந்து ஒரு தனிப்படை அமைத்திருப்பதாக திரங்கானு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.
Polis Terengganu merampas 200 kg syabu bernilai hampir RM6 juta dari Toyota Vellfire yang ditinggalkan di tepi jalan di Kampung Guntong Luar. Suspek dipercayai melarikan diri selepas kenderaan terbabas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *