RM 600,000 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 19 Nov, 2024
நவம்பர் 19,
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சிகரெட்டுகளைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான APMM கிளாந்தான் மாநில இயக்குநர் KEPTEN ERWAN SHAH SOAHDI தெரிவித்தார். கிளாந்தான் எல்லை பகுதியில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில் RM 600,000 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகாலை 12.30 மணியளவில் 28 பெட்டிகள் கொண்ட மீன்பிடி படகு Kuala Besar தீவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் படகில் உள்ள பொருள்களைச் சோதனையிட்டதில் மற்றொரு படகில் கடத்தல் பொருள்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும் அதிகாலை 4.00 மணிக்கு 51 பெட்டிகளுடன் மற்றொரு மீன்பிடி படகை Sungai Tumpat பகுதியில் கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு கடத்தல்களில் உள்ள சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு RM 600,000 என சுங்கத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் முக்கியமானப் பகுதிகளில் சோதனையை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Maritim Negeri Kelantan berjaya menggagalkan dua cubaan menyeludup 800,000 batang rokok bernilai RM600,000 di perairan Tumpat dan Kuala Besar. Kedua-dua rampasan berlaku berkat risikan, walaupun suspek sempat melarikan diri ke hutan bakau.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *