இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:அன்வாரிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7-

நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை மலேசிய இந்து சங்கம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பித்துள்ளது.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் ஸ்காட்டில் நேற்று நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் டி.கணேசன் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய ஒற்றுமையைப் பேணிவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஆலயம் தொடர்பான விவகாரங்கள் குறிப்பாக நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்ளை அறிவுப்பூர்வமாக கையாள வேண்டியது முக்கியமாகும் என்று வலியுறுத்தினார்.

உங்களின் மனக்குறைகளை செவிமடுத்த பிறகும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதித்த பிறகும் அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மகஜரொன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அக்கூட்டத்தில் தங்க கணேசன் வலியுறுத்தினார்.நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அண்மையில் நிகழ்ந்த ஆலய சர்ச்சையைப் போன்ற அதே பிரச்சினைகள் மீண்டும் நிகழக்கூடாது. அதற்கு இதுவொரு பாடமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

அந்த மகஜர் நேற்று பிற்பகல் 3மணிக்கு பிரதமரின் அலுவலகப் பிரதிநிதி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்றைய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஆலயப் பேராளர்கள், மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள். இதர இந்து சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள 130 ஆண்டுகள் பழைமையான தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தினால் அண்மையில் பெரிய சர்ச்சை மூண்டது. அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஜேக்கல் நிறுவனம் புதிய பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க முடிவு செய்ததால் அது இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

அதற்குப் பதிலாக அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஆலய நிர்மாணிப்புக்காக சுமார் 4,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Malaysian Hindu Sangam telah menyerahkan memorandum kepada Perdana Menteri mengenai isu dan penyelesaian berkaitan kuil Hindu, termasuk isu pemindahan kuil. Presiden T. Ganeshan menekankan pentingnya menangani isu ini secara berhemah agar insiden lama tidak berulang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *