மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
கட்டுப்பாட்டை இழந்த Toyota Avanza வாகனம் மோதியதில் 32 வயது மோட்டார் சைக்கிளோட்டியான இல்லத்தரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Pendang மாவட்டக் காவல் ஆணையர் Shamzury Saman தெரிவித்தார். பிற்பகல் 3 மணியளவில் Kampung Guar Kepayang சாலையில் உள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த 61 வயது வாகனமோட்டி எதிர்திசையில் வந்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியதாகவும் மோதலின் விளைவால் 32 வயது பெண் மோட்டார் சைக்கிளோட்டி பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Pendang மாவட்டக் காவல் ஆணையர் Shamzury Saman தெரிவித்தார். விபத்திற்குக் காரணமான 61 வயது முதியார் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளான நிலையில் தற்போது விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita berusia 32 tahun maut selepas motosikal yang ditunggangnya dirempuh oleh Toyota Avanza yang hilang kawalan di Kampung Guar Kepayang, Pendang. Mangsa tercampak ke sungai dan meninggal di tempat kejadian. Pemandu kereta berusia 61 tahun ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *