உலக நீரிழிவு நாள் தொடர்பாக பினாங்கில் விழிப்புணர்வு முகாம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, நவ. 18-

நீரிழிவு நோய் தொடர்பில் பெரும்பான்மையோரிடையே நிலவும் அலட்சியப் போக்கும் அக்கறையின்மையும், கவலை அளிக்கும் விதத்தில் நீடித்துக் கொண்டிருப்பதாக, அந்நோய்க்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இங்கு ஈடுபாடு காட்டியிருக்கும், பினாங்கு எட்வெண்ட்டிஸ்ட் தனியார் மருத்துவமனையின் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோய் குறித்த பற்பல ஆய்வுகளில், மக்களிடையே அன்றாட உணவு முறைகளில், கட்டுப்பாடற்ற தன்மையே முதலிடம் வகிக்கின்ற உண்மை புலப்பட்டுள்ளதாகவும், இந்நோயின் அபாயத்தை அறிந்தும் அறியாத நிலையிலும், இதன் பாதிப்பு இருந்தாலும், உகந்த சிகிச்சைக்கு உடன்படாத சூழலிலும், மக்களில் பலர் தங்கள் வாழ்க்கையை தொடர்வது, பரிதாபத்தின் உச்சமென்று, அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோயின் அபாயத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு, புகட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றாமல் ஆலோசனைகளை புறக்கணிப்பது அநேகரிடம் காணப்படுவதால், இத்தகையோருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் உருவெடுப்பதாக, அத்தரப்பினர் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

உடல் ரீதியாக உணரப்படும் உபாதைகள் தொடர்பில், மருத்துவ சிகிச்சைக்காக வருகின்ற அநேக நோயாளிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வாயிலாக, அவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கமிருப்பதை கண்டறிந்தாலும், அவர்களை தொடர் சிகிச்சைக்கு உட்படுத்துவதே, முதற்கட்ட சங்கடம் என்றும் அத்தரப்பினர் குறைபட்டுக் கொண்டனர்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தக் கூடிய மாத்திரை வகைகளை சரிவர உட்கொள்ளாமல்,பாதியிலேயே கைவிடும் அவலம்,அநேகரிடம் காணப்படும் கூடாத பழக்கமாக நீடித்து வரும் பரிதாப நிலையால், பலர் இந்நோயினால் பெரும் அல்லலை எதிர்கொண்டு துன்புறுவதும், நோய் முற்றிய நிலையிலும், உணவு முறைகளில் கட்டுப்பாட்டு வழிமுறையை பின்பற்றாதவர்களும், நிறைய பேர் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வழிமுறைகள் பின்பற்றுப்படுவதன் மூலம், நீரிழிவு நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சாத்தியமிருப்பதை, அத்தரப்பினர் சுட்டிக் காட்டியிருப்பதோடு, இதனை, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் மன உறுதியைக் கைவிடாமலிருப்பது முக்கியக் கடமையாகுமென்றும்அறிவுறுத்தியுள்ளனர். நேற்று மாலையில் இங்கிருக்கும் *"குயின்ஸ்பே* பேரங்காடி வளாகத்தில், *உலக நீரிழிவு நாள்* தொடர்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரசார முகாமில், ஒருசேர பங்கேற்றிருந்த மருத்துவ அதிகாரிகள் பலர், மேற்கண்டவாறு கருத்துரைத்து, இவற்றுக்கெல்லாம் தகுந்த வழிகளில் ஆலோசனைகள் காண்பது அவசியமென்றும் உணர்த்தினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *