கைது செய்யப்பட்ட 143 வெளிநாட்டினர்கள் தாயகம் திரும்பினர்!

top-news

நவம்பர் 17

கடந்த மாதம் முதல் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்ட 143 வெளிநாட்டினர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்து வேலை செய்து வந்த அனைவரிடமும் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எந்தவொரு குற்றச் சம்பவங்களில் ஈடுபடாதது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களின் சொந்த நாட்டின் தூதரகத்தின் ஒப்புதலுடன் அவர்கள் தாயகம் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

105 Indonesia நாட்டினர், 16 Pakistan நாட்டினர், 8 நேப்பால் நாட்டினர், 5 வியட்னாம் நாட்டினர், 5 பிலிப்பைன்ஸ் நாட்டினர் 3 கம்போடிய நாட்டினர் 1 தாய்லாந்து ஆடவர் என மொத்தம் 143 பேர் KLIA 1, KLIA 2, Stulang Laut FERI என 3 வழியாகத் தாயகம் திரும்பியுள்ளதைக் குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியது.
தற்போது தாயகம் திரும்பினாலும் அவர்கள் நாட்டுச் சட்டப்படியும் அவர்கள் தண்டனை அனுபவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JABATAN IMIGRESEN MALAYSIA Memindahkan 143 tahanan pelbagai warganegara ke negara asal minggu ini, melalui KLIA dan Terminal Feri Stulang Laut. Kos pemindahan dibiayai melalui simpanan tahanan, keluarga, atau kedutaan. Semua tahanan disenarai hitam dan dilarang kembali ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *