ZAHID HAMIDI நல்லவர்! ஆனால் சர்ச்சையானவர்! - Zaid Ibrahim
- Sangeetha K Loganathan
- 17 Nov, 2024
நவம்பர் 17,
துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான ZAHID HAMIDI பாரிசான் தலைவராகவே இருந்தாலும் அவரால் பிரதமராக முடியாது என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் Zaid Ibrahim தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 இல் பாரிசான் நேசனல் ஆட்சியைப் பறிகொடுத்தற்கு நஜீப் மட்டும் காரணமல்ல, நஜீப்பின் தலைமையில் துணைப் பிரதமராக இருந்த ZAHID HAMIDI மற்றொரு காரணம். அவர் எதிர்நோக்கிய 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையில் ஆட்சியைப் பாரிசான் கைப்பற்றினாலும் BARISAN NASIONAL தலைவரான ZAHID HAMIDI பிரதமராக முடியவில்லை.
அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கும் பாரிசானை ZAHID HAMIDI வழிநடத்தினாலும் அவரால் பிரமராக முடியாத அரசியல் சூழலில் ZAHID HAMIDI சிக்கியுள்ளார். 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ZAHID HAMIDI விடுவிக்கப்பட்டாலும் எப்போது வேண்டுமானாலும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பதை ZAHID HAMIDI அறிவார் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் Zaid Ibrahim தெளிவாக விளக்கமளித்தார்.
Zaid Ibrahim menyatakan Ahmad Zahid Hamidi seorang pemimpin baik tetapi kontroversial. Walaupun dilepas tanpa dibebaskan daripada 47 tuduhan rasuah, kes tersebut terus memberi kesan terhadap imejnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *