வெ. 2.1 கோடி போர்க்கப்பல் ஊழல் வழக்கு- முன்னாள் கடற்படைத் தலைவர் விடுதலை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 13-

எல்லையோரப் போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் தொடர்பான ஊழல் வழக்கிலிருந்து அரச மலேசிய கடற்படையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அமாட் ரம்லி முகமது நோர் நேற்று நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.இரண்டு கோடியே பத்து லட்சம் வெள்ளி நம்பிக்கை மோசடி தொடர்பில் ரம்லி மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.

அக்குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுஸானா உசேன் நேற்று அறிவித்தார்.

80 வயதான ரம்லி விசாரணையை எதிர் கொள்ளும் அளவுக்கு உடல்நலத்துடன் இல்லை எனும் காரணத்தின் அடிப்படையில் அவரை வழக்கிலிருந்து விடுவிக்காமலேயே UN குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இருதரப்புகளின் வாதப் பிரதிவாதங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனநலம் மீதான கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையையும் ஆராய்ந்ததில் அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியுடையவராக இல்லை என்று நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. ஆகவே, அவரை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்கிறது. பிணையுறுதித் தொகையும் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றார் சுஸானா.

போஸ்தெட் நேவல் ஷிப்யார்ட் (பிஎன்எஸ்) எனும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ரம்லி, அந்நிறுவனத்தின் வாரிய இயக்குநர்களின் ஒப்புதலைப் பெறாமல் சிங்கப்பூரின் மூன்று நிறுவனங்களுக்கு 13,541, 140 வெள்ளியும் 1,360, 716 வெள்ளியும் 6,182,295 வெள்ளியும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் தொடர்பில் அவர் மீது தண்டனைச் சட்டம் 409ஆவது பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகப்பட்சம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் போன்றவற்றை விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.

Bekas Ketua Tentera Laut Malaysia, Tan Sri Ahmad Ramli Mohd Nor, dibebaskan bersyarat daripada kes penyelewengan dana LCS berjumlah RM21 juta. Mahkamah mendapati beliau tidak sihat untuk perbicaraan berdasarkan laporan perubatan Hospital Kuala Lumpur, dan wang jaminan dikembalikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *