மாமன்னரை இழிவுப்படுத்திய MUHYIDDIN! இளவரசர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

நாட்டின் 10 ஆவது பிரதமரை நியமிப்பதில் முன்னாள் மாமன்னர் Al-Sultan Abdullah நியாயமாக நடந்து கொள்ளவில்லை என பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin குற்றம் சாட்டியிருந்த நிலையில் பகாங் பட்டத்து இளவரசர் Tengku Hassanal Ibrahim Alam Shah Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் மாமன்னரின் செயலை இழிவுப்படுத்தும் வகையில் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் கருத்து தெரிவிப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுவதாக இளவரசர் தெரிவித்தார். RAJA RAJA MELAYU அனைவரும் அரசியல் கட்சிகளில் ஈடுபடுவதில்லை. மக்களாட்சியை மதித்து தேர்தல் நடத்திய பின்னர் பெரும்பான்மையற்ற நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. இதனால் அனைத்துக் கட்சியின் தலைமைகளை அழைத்து கூட்டணி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது. இவை வெளிப்படையாக அமைக்கப்பட்ட போதிலும் Tan Sri Muhyiddin Yassin பொதுவில் முன்னாள் மாமன்னரை இழிவுப்படுத்தியது முற்றிலும் அரசுக்கும் மலாய் ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40(2) இன் அடிப்படையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாமன்னரின் சுயவிருப்பத்திற்குப் பிரதமர் நியமிக்கப்படவில்லை என முன்னாள் மாமன்னரின் புதல்வரும் பகாங் பட்டத்து இளவரசருமான Tengku Hassanal Ibrahim Alam Shah Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah தெளிவுப்படுத்தினார். அப்போதைய மாமன்னரின் நியமனத்திற்குப் பின் நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் 19 டிசம்பர் 2022 ஆம் நாளன்று தனது பெரும்பான்மையை நிரூபித்து அதிகாரப்பூர்வமாகப் பிரதமரானார்.

இத்தகைய நிலையில் அரசாட்சி, இனம், மதம் எனப்படும் 3R விதியை மீறிய Tan Sri Muhyiddin Yassin மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாமன்னரின் புதல்வரும் பகாங் பட்டத்து இளவரசருமான Tengku Hassanal Ibrahim Alam Shah Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah தெரிவித்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *