ஜனவரி மாதம் வரை 46 ஆசியான் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 12-

2025ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியா 377 கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில், சுடந்த ஜனவரி மாதம் வரை 46 கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் லங்காவியில் ஆழமான விவாதங்களுடன் தொடங்கிய ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் நான்கு சந்திப்புகள் இடம்பெற்றதாக வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் கூறினார்.

“மலேசியா நடத்திய ஒவ்வொரு கூட்டமும் அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சுமுகமாக நடந்தன. கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், விருந்தினராக மலேசியாவின் நல்ல விருந்தோம்பல் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். என்று அவர் கூறினார்.

ஆசியானுக்குத் தலைமையேற்றிருக்கும் மலேசியாவின் முன்னெடுப்புகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில், நேற்று, மேலவையில் செனட்டர் டான்ஸ்ரீ அனிஃபா அமான் எழுப்பிய கேள்விக்கு, முஹமட் அலாமின் அவ்வாறு பதிலளித்தார்.

Malaysia, sebagai Pengerusi ASEAN 2025, telah berjaya mengadakan 46 daripada 377 mesyuarat yang dirancang. Timbalan Menteri Luar, Datuk Mohamad Alamin, menyatakan mesyuarat berlangsung lancar dengan kerjasama pelbagai pihak, dan delegasi asing memuji hospitaliti Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *