நுழைவுக்கான நிபந்தனை தவறிய 95 வங்காளதேசர்களுக்கு மலேசியாவுக்குள் நுழையத் தடை!

- Muthu Kumar
- 16 Mar, 2025
சிப்பாங், மார்ச் 16-
இந்நாட்டிற்குள் நுழையும் நிபந்தனையைப் பின்பற்றத் தவறிய 95 வங்காளதேச ஆடவர்கள் நுழைவதை மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் (ஏகேபிஎஸ்) நிராகரித்தது.
இந்த நிபந்தனை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இது கேஎல்ஐஏயில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டது.
சுற்றுலா செல்வதாகக் காரணம் கூறி இவர்கள் நுழைந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனினும், வேலை செய்யத்தான் வந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காகக் கண்காணிப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 139 அந்நியர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நாட்டிற்குள் அந்நியர்கள் நுழைவுக் கட்டுப்பாட்டை உறுதி செய்து எப்போதும் வலுப்படுத்த மற்றும் வேலை செய்ய சுற்றுலா விசாவை துஷ்பிரயோகப் படுத்துவதைத் தவிர்க்கக் கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படும் என்று ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
Seramai 95 warga Bangladesh ditolak kemasukan ke Malaysia oleh AKPBS kerana gagal mematuhi syarat. Mereka disyaki masuk dengan visa pelancong tetapi bertujuan bekerja. Pemeriksaan di KLIA melibatkan 139 warga asing, dan kawalan ketat akan terus dilaksanakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *