ஜம்ரி வினோத் பதிவு நீக்கப்பட்டது! - facebook அதிரடி

- Shan Siva
- 09 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 9: ஏரா எஃப் எம் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள்
இந்துக்களின் உணர்வுப்பூர்வமான காவடி சடங்கை கேலி செய்த செயலுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய
சமய போதகர் ஜம்ரி வினோத் தனது முகநூல் பதிவில், காவடி ஆட்டத்தை மேலும்
கொச்சைப்படுத்தும் விதமாக பேய்களின் ஆட்டம் என்று வர்ணித்திருந்தார். இது இந்துக்களிடையே
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜம்ரியின் அந்தப்
பதிவை Facbook
நிறுவனம் நீக்கியுள்ளதாகத்
தெரிவித்துள்ளது.
ஜம்ரியின் பதிவு
குறித்து "செயலற்றதாகத் தெரிகிறது" என்று கேள்வி எழுப்பிய ஜெலுத்தோங்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி இதனைத் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்த விவகாரம் தொடர்பாக பல போலீஸ் புகார்கள் பதிவு
செய்யப்பட்ட பிறகும் ஜம்ரியின் பதிவு ஏன் எம்.சி.எம்.சி அல்லது காவல்துறையால்
அகற்றப்படவில்லை அல்லது தடுக்கப்படவில்லை என்று ராயர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக, இன்று ஃபேஸ்புக் குறிப்பிட் அந்தப் பதிவை நீக்கியது என்று அவ்வாணையம் தெரிவித்துள்ளது!
Facebook telah memadamkan hantaran kontroversi Zamri Vinod yang menghina perarakan kavadi Hindu sebagai "tarian hantu". Ini berlaku selepas laporan polis dan desakan daripada MCMC, yang menyiasat kes itu di bawah Akta Komunikasi dan Multimedia 1998 (Seksyen 233).
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *