டாடா ஸ்டீல் இந்தியா செஸ் 'பிளிட்ஸ்' பிரிவில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன்!
- Muthu Kumar
- 18 Nov, 2024
கோல்கட்டா:
டாடா ஸ்டீல் இந்தியா செஸ் 'பிளிட்ஸ்' பிரிவில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடந்தது.
'பிளிட்ஸ்' பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது. முதல் 9 சுற்றுகளின் முடிவில் நார்வேயின் கார்ல்சன் (6.5 புள்ளி), இந்தியாவின் பிரக்ஞானந்தா (6.0) முதலிரண்டு இடங்களில் இருந்தனர்.பத்தாவது சுற்றில் சகவீரர் விதித் சந்தோஷை வீழ்த்திய இந்தியாவின் பிரக்ஞானந்தா, நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் நாராயணனுக்கு எதிரான 11, 12வது சுற்றை 'டிரா' செய்தார்.
அடுத்த நான்கு சுற்றில் அமெரிக்காவின் சோ வெஸ்லே, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர், இந்தியாவின் நிஹால் சரினிடம் தோல்வியடைந்தார். ரஷ்யாவின் டேனியல் டுபோவுக்கு எதிரான 17வது சுற்றை 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, கடைசி சுற்றில் சகவீரர் அர்ஜுனை வீழ்த்தினார்.
பதினெட்டு சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 'டிரா', ஒரு தோல்வி என, 13.0 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, நடப்பு ஆண்டில் இவர் வென்ற 10வது பட்டம். ஏற்கனவே இத்தொடரின் 'ரேபிட்' பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அடுத்த மூன்று இடங்களை அமெரிக்காவின் சோ வெஸ்லே (11.5 புள்ளி), இந்தியாவின் அர்ஜுன் (10.5), பிரக்ஞானந்தா (9.5) கைப்பற்றினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *