கப்பல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் இருந்து திருடப்பட்ட கார்கள்- போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், மார்ச் 16-

கிள்ளானிலுள்ள கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான சேமிப்பு இடத்தில் அத்துமீறி நுழைந்து சில கார்களைத் திருடிச் சென்ற சம்பவத்தில் விசாரணை கோப்பு திறந்து சந்தேகிக்கப்படும் சில நபர்களை போலீஸ் அழைக்கும்.

கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குநரான 44 வயதுடைய ஓர் அந்நியரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டதாக கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

கிள்ளான், பண்டமாரானிலுள்ள கோத்தா பாயு எமாஸ் பகுதிக்கு ஓர் ஆடவர் கும்பல் வந்து நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காப்புறுதி தரப்பின் கோரிக்கைக்காகக் காத்திருக்கும் 28 கார்களை வெளியே எடுத்துச் சென்று விட்டது.
இதுகுறித்த மேல் விசாரணைப்படி கப்பல் நிறுவனத்தின் மீது அதிருப்தி கொண்ட கார்களின் உரிமையாளர்கள் அக்கார்களை வெளியேற்ற செம்போயான் மலேசியா அரசு சார்பற்ற பயனீட்டாளர்கள் இயக்கத்தின் உதவியை நாடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புகாரைத் தொடர்ந்து அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 448ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் 1 விசாரணைக் கோப்பை மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு திறந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்று ஓர் அறிக்கையில் ஏசிபி சா ஹூங் ஃபோங் குறிப்பிட்டார்.

Polis membuka kertas siasatan berhubung kecurian 28 kereta dari stor syarikat perkapalan di Klang. Pemilik kenderaan dipercayai mendapatkan bantuan NGO untuk mengeluarkan kenderaan mereka. Polis akan memanggil beberapa individu bagi siasatan di bawah Seksyen 448 Kanun Keseksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *