நாய் மீது சுடுநீர் ஊற்றிய கேகே மார்ட் கடை ஊழியர் வேலையிலிருந்து நீக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, மார்ச் 10 -

பேராக், ஈப்போவுக்கு அருகிலுள்ள மெங்கெலெம்பு, ஜாலான் பெசாரில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றுக்கு வெளியில் சுற்றித் திரிந்த ஒரு நாய் மீது, சுடு நீரை ஊற்றியதாக கூறப்பட்ட அக்கடை ஊழியர் ஒருவர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

நிறுவனத்தின் உள்விசாரணைக்குப் பின்னர் அந்த ஊழியர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஜாலான் பெசாரில் உள்ள தனது பலசரக்குக் கடைக்கு வெளியில் அச்சம்பவம் நிகழ்ந்ததை கேகே சூப்பர் மார்ட் நேற்று உறுதிப்படுத்தியது."அந்த ஊழியர் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அவரின் வேலை ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அதை நாங்கள் கடுமையாகக் கருதுகிறோம்.“கேகே சூப்பர் மார்டில். விலங்குகளுக்கு எதிரான எந்த ஒரு கொடுமையையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.அத்தகைய நடவடிக்கைகளில் நாங்கள் சமரசமும் காண மாட்டோம்.

"விலங்குகள் பராமரிப்பு மைய உரிமையாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டு விட்டோம். அந்த விலங்கிற்கான மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று, ஒரு முகநூல் பதிவில் கேகே சூப்பர் மார்ட் தெரிவித்தது.

கேகே சூப்பர் மார்ட் பலசரக்குக் கடையில் இருந்து ஒரு கோப்பையில் சுடு நீரை எடுத்து வந்த அக்கடையில் பணி புரிந்த அந்த ஊழியர், அதை அந்த நாயின் மீது ஊற்றிய காட்சி ரகசிய காமிராவில் பதிவாகி இருந்தது. அக்காட்சிகள் அடங்கிய ஒரு காணொளி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டும் வந்தது.

அக்கடையின் ஊழியர்கள் என்று நம்பப்படும் சிலர் அச்சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த காட்சியும் அக்காமிராவில் பதிவாகி இருந்தது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் தமது தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று. ஈப்போ இடைக்கால போலீஸ் தலைவர் முஹமட் சஜிடான் அப்துல் சுக்கோர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது.

Seorang pekerja KK Super Mart di Menglembu, Ipoh, dipecat serta-merta selepas menuang air panas ke atas anjing jalanan. Syarikat mengutuk perbuatan itu dan bersedia menanggung kos perubatan anjing tersebut. Polis sedang menyiasat kejadian yang tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *