ஜே.எஸ்.ஜே.என்-இன் இடைக்கால இயக்குநராக டிசிபி மாட் சானி நியமனம்!

- Muthu Kumar
- 15 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 15-
இன்று தொடங்கி புக்கிட் அமான், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இடைக்கால இயக்குநராக அதன் நடவடிக்கை, உளவுத்துறையின் துணை இயக்குநர் டிசிபி மாட் சானி & முஹமட் சலாஹூடின் சே அலி நியமிக்கப்பட்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை பதவி ஓய்வு பெறும் டத்தோஸ்ரீ ஹாவ் கொக் சின்னுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையமான புலாவ்போலில் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹஷிம் மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஒப்படைப்பு விழாவில் தேசிய படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை கலந்து கொண்டார்.
கடந்தாண்டு 167 கோடி ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் மற்றும் விஷங்கள் பறிமுதல் நடவடிக்கை உட்பட குற்றப் புலனாய்வுத் துறைக்கு மிகப் பெரிய வெற்றிகளை டத்தோஸ்ரீ ஹாவ் கொக் சின் தலைமைத்துவம் பதிவு செய்துள்ளதாக டத்தோஸ்ரீ அயூப் கான் தெரிவித்தார்."நாம் நல்ல சாதனைகளைச் செய்யும்போது. சமுதாயமும் போலீஸ் படை உறுப்பினர்கள் நாம் செய்த சேவையை நினைவில் கொள்வார்கள். என்றார் அவர்.
இதனிடையே. சாங் சாக்கா பீரு குழுவில் தமது 34 ஆண்டுகால சேவையில் தமக்கு ஊக்குவிப்பையும் ஆதரவையும் வழங்கிய துறையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் டத்தோஸ்ரீ ஹாவ் கொக் சின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
DCP Mat Sani dilantik sebagai Pengarah Sementara JSJN menggantikan DCP Datuk Seri Hau Kok Chin yang bersara. Upacara serah tugas berlangsung di Pulapol. Tahun lalu, JSJN merampas dadah bernilai RM1.67 bilion. Datuk Seri Hau menghargai sokongan sepanjang 34 tahun perkhidmatannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *