5 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் கவிழ்ந்த கார்! ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்!

top-news

மார்ச் 12,


ஜொகூரில் உள்ள Jalan Sultan Ismail, Danga Bay கால்வாயில் வாகனம் கவிழ்ந்து மூழ்கியதில் வாகனத்திற்குள் சிக்கியிருந்த ஆடவரைப் பொதுமக்கள் மீட்டனர். காலை 11 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த Perodua Axia ரக வாகனம் Danga Bay பெரிய கால்வாயில் கவிழ்ந்ததாக அவசர அழைப்பைப் பெற்றதாக ஜொகூர் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது.

15 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போது கால்வாயில் கவிழ்ந்த வாகனத்திற்குள் சிக்கியிருந்த ஓட்டுநரைப் பொதுமக்கள் மீட்டுக் கொண்டிருந்ததாகவும் பாதுகாப்பு இயந்திரங்களுடன் மீட்பு அதிகாரிகளும் பொதுமக்களும் வாகனமோட்டியை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 5 மீட்டர் ஆழமுள்ள Danga Bay கால்வாயில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Sebuah Perodua Axia terbabas dan jatuh ke dalam parit berhampiran Jalan Sultan Ismail, Danga Bay, Johor. Mangsa lelaki mengalami kecederaan dan diselamatkan orang awam sebelum bomba tiba. JBPM Johor menggerakkan 15 anggota dan menjalankan operasi menyeluruh di lokasi kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *