பள்ளிக்கூடப் பையில் தொப்புள் கொடியுடன் குழந்தை!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
பள்ளிக்கூடப் பையில் கைவிடப்பட்ட நிலையில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு 40 வயது பெண் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவக் குழுவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் சுங்கை பெட்டாணியில் உள்ள Taman Semarak குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் அக்குழந்தையைக் கண்டதாக 40 வயது Yeoh Yit Chen எனும் பெண் புகார் அளித்த நிலையில் அக்குழந்தை மீட்கப்பட்டு Sultan Abdul Halim மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita di Sungai Petani terkejut menemui bayi perempuan bertali pusat dalam beg galas di bangsal hadapan rumahnya. Bayi itu ditemui menangis tanpa pakaian sebelum dibawa ke Hospital Sultan Abdul Halim untuk pemeriksaan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *