5,272 இளைஞர்கள் திவால் நிலையில் உள்ளனர்! – HANNAH YEOH

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
மலேசியாவில் 5272 இளைஞர் திவாலானவர்களாக உள்ளதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். 5,189 பேர் 25 முதல் 34 வயதுள்ளவர்கள் என்றும் 83 பேர் 25 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 877 பேர் திவாலாகியதாகக் கணக்கிடப்பட்டிருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டு 727 பேர் திவாலாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2,776 இளைஞர்கள் தனிநபர் கடனுக்காகத் திவாலாகியிருப்பதாகவும் 474 பேர் வீட்டுக் கடனுக்காகத் திவாலாகியிருப்பதாகவும் 444 பேர் வாகனக் கடனுக்காகத் திவாலாகியிருப்பதாகவும் 110 பேர் வருமான வரியால் திவாலாகியிருப்பதாகவும் 89 பேர் கிரெடிட் கார்ட் கடனால் திவாலாகியிருப்பதாகவும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார்.
Sebanyak 5,272 belia berusia 34 tahun ke bawah diisytiharkan muflis sejak 2020. Pada 2024, kes kebankrapan meningkat kepada 877. Punca utama ialah pinjaman peribadi (46.4%), diikuti pinjaman perniagaan, pinjaman perumahan, dan hutang lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *