DAP கட்சித் தேர்தல்! அம்னோ தலையிடாமல் இருப்பது நல்லது! LIM GUAN ENG எச்சரிக்கை!

top-news

மார்ச் 9,

டி.ஏ.பி கட்சியின் தலைமைக்கானத் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில் LIM GUAN ENG-இன் காலம் முடிவுக்கு வருவதாக அம்னோவின் முன்னாள் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்திருப்பது அவசியமற்றது என டி.ஏ.பி தலைவர் LIM GUAN ENG தெரிவித்தார். பக்காத்தான் கூட்டணியில் அம்னோவுடன் டி.ஏ.பி ஒன்றாகப் பயணிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் டி.ஏ.பியின் உள்விவகாரங்களில் இதுவரை அம்னோவின் தலைமை தலையிட்டதில்லை என்றும் இந்த புரிந்துணர்வு அம்னோவின் மூத்த தலைவர்களுக்கும் இருக்க வேண்டும் என LIM GUAN ENG தெரிவித்தார்.

முன்னதாக அம்னோவிற்கும் டி.ஏ.பிக்கும் மோதல்கள் இருந்ததை மறுக்கவில்லை என்றாலும் தற்போது வளமான மலேசியாவுக்காக ஒற்றுமை கூட்டணியில் புரிந்துணர்வுகளின் அடிப்படையில் இணைந்திருக்கிறோம், இதனால் டி.ஏ.பி முழுமையாக அம்னோவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக நினைப்பதில் அர்த்தமில்லை என்றும் டி.ஏ.பி கட்சியின் உள்விவகாரங்களில் மற்ற கட்சிகள் தலையிடாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது என LIM GUAN ENG எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Lim Guan Eng menegaskan bahawa pemilihan kepimpinan DAP adalah urusan dalaman parti dan UMNO tidak perlu campur tangan. Beliau mengingatkan bahawa meskipun DAP dan UMNO bekerjasama dalam kerajaan perpaduan, DAP tidak berada di bawah kawalan UMNO.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *