STEM கல்வியை மேற்கொள்ள மாணவர்களுக்கு துணை பிரதமர் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஆராவ், மார்ச் 15:  பள்ளிகளில்தங்கும் விடுதிகளில் தங்கி படிக்கும் 70% மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்  பாடங்களான STEM படிப்பைத் தேர்ந்தெடுப்பதந் மூலம் தொழில்களுக்குத் தேவையான 60,000 பொறியாளர்களை உருவாக்கும் இலக்கை அடைய உதவும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இத்துறையில் கவனம் செலுத்தும் மாணவர்கள்  சிறந்த அடைவுநிலையைப் பெற்றால், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக வலையமைப்பின் (MTUN) பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

முழுமையான தங்கும் வசதி கொண்ட பள்ளிகளுக்கு இதை வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை பிரதமர் , டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முழுமையான தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 70% பேர், இந்த முக்கியமான துறைகளில் நிபுணத்துவத்தை வலுப்படுத்த அடுத்த ஆண்டு முதல் STEM ஸ்ட்ரீமைத் தேர்வு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Timbalan Perdana Menteri Ahmad Zahid Hamidi menyatakan bahawa 70% pelajar di sekolah berasrama penuh perlu memilih aliran STEM bagi memenuhi keperluan 60,000 jurutera. Pelajar cemerlang berpeluang melanjutkan pengajian di universiti MTUN. Cadangan ini turut disokong oleh Perdana Menteri Anwar Ibrahim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *