குறிப்பிட்ட சில பொருள்கள் பள்ளிகளில் விற்பனை செய்ய தடை - ஃபத்லினா சிடெக்!

- Muthu Kumar
- 10 Mar, 2025
கோத்தா பாரு, மார்ச் 10:
மாணவர்களுக்கு உடல்நல ஆபத்தை விளைவிக்கும் உணவுகள், வேப் சாதனங்களை ஒத்த மிட்டாய்கள் உட்பட குறிப்பிட்ட சில பொருள்கள் பள்ளிகளில் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவுகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
பள்ளி வளாகங்களில் ஆபத்தான உணவுகள் விற்கப்படாது என்று தாங்கள் உறுதியளிப்பதாகவும், அதேவேளை பள்ளிகளுக்கு வெளியே சம்பந்தப்பட்ட பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பு தங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பினாங்கின் நுகர்வோர் சங்கம், வேப் மற்றும் சிரிஞ்ச் வடிவ மிட்டாய்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகளை எழுப்பியது, அவை குழந்தைகளிடையே புகைபிடிக்கும் பழக்கத்தை இயல்பாக்குவதற்கு பங்களிக்கக்கூடும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Menteri Pendidikan Fadhlina Sidek mengumumkan larangan penjualan makanan berbahaya termasuk gula-gula berbentuk vape di sekolah. Tindakan tegas akan diambil terhadap pihak yang melanggar peraturan, dengan kerjasama pihak berkuasa tempatan dan Kementerian Kesihatan bagi mengawal penjualan di luar sekolah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *