ராஜினாமா செய்யப்படுவதை தடுக்க தாதியர்களுக்கான அலவன்சை மறுஆய்வு செய்வீர்!

- Muthu Kumar
- 10 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 10-
தாதியர்களுக்கான அலவன்சை மறுஆய்வு செய்யுமாறு, மலேசிய தாதியர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.இதில், குறிப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு வெளியில் பணி புரியும் அனைத்து தாதியர்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் அலவன்ஸ், மாதம் ஒன்றுக்கு 1,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பணி நெருக்குதல் மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினம் உட்பட, தங்களின் குடும்பங்களிலிருந்து பிரிந்து வேறு இடங்களில் பணி புரியும் தாதியர்கள் எதிர்நோக்கி வரும் "அதிகப்படியான” நெருக்குதலை” அந்த மறுஆய்வு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அச்சங்கத் தலைவி சாய்டா அத்மான் வலியுறுத்தினார்.
“தீபகற்ப மலேசியாவில் பணி புரிந்து வரும் சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த தாதியர்கள் 1,000 வெள்ளி கூடுதல் மத்திய அலவன்ஸ்சைப் பெற்று வருகின்றனர். இந்த அலவன்ஸ் மறுஆய்வு செய்யப்பட்டு இருக்கவில்லை” என்று எஃப்எம்டியிடம் அவர் தெரிவித்தார்.“இந்த மத்திய அலவன்ஸ் குறித்து மட்டும் அரசாங்கம் மறுஆய்வு செய்யக்கூடாது, அதோடு சேர்ந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய அனைத்து அலவன்ஸ்சுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று சாய்டா கேட்டுக் கொண்டார்.
தங்கள் வேலையை ராஜினாமா செய்வதிலிருந்து அதிகமான தாதியர்களைத் தடுப்பதற்காக, பதவி அடைப்படையிலான ஒரு கூடுதல் ஊக்குவிப்பு அலவன்ஸ்சுகளை அவர்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சை அவர் வலியுறுத்தினார்.
மாதம் ஒன்றுக்கான 100 வெள்ளி அலவன்ஸ், கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து மறுஆய்வு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சின் பயிற்சிக் கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில், பதவி அடிப்படையிலான தகுதிகள் மற்றும் மேம்பட்ட டிப்ளோமாக்கள் கொண்ட துணை மருத்துவர்களுக்கு இந்த அலவன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டில் பல பகுதிகளில் பணியாற்றும் 800க்கும் மேற்பட்ட சரவாக்கைச் சேர்ந்த தாதியர்கள் தங்களின் சொந்த மாநிலங்களில் பணியாற்ற விரும்புவதாக,சரவாக் துணை முதலமைச்சர் டாக்டர் சிம் கூய் ஹியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.1963 மலேசிய உடன்பாட்டின் கீழ் மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் பேசிவரும் விவகாரங்களில், சுகாதாரப் பணியாளர்களின் வேலை இடமும் அடங்கும் என்று அவர் கூறியிருந்தார்.
சில தாதியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்திருப்பதற்கான காரணங்களில், பிற மாநிலங்களில் வேலை செய்வதும் அடங்கும் என்று. துணை சுகாதார அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சௌனி இம்மாதம் 3ஆம் தேதி தெரிவித்திருந்தார். மாநில ரீதியில் நிலவும் தேவையை மையமாகக் கொண்டு, தாதியர்களின் பணியிடத்தை முடிவு செய்வதில் சுகாதார அமைச்சு பெரும் சவாலை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்
கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,754 தாதியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களில் 27.98 விழுக்காட்டினர் தனிப்பட்ட காரணங்களினால் அவ்வாறு செய்திருக்கின்றனர்.
Persatuan Jururawat Malaysia menggesa kerajaan menyemak semula elaun jururawat, termasuk menaikkan elaun kerajaan pusat kepada RM1,000 sebulan bagi mereka yang bertugas di luar negeri asal. Semakan ini penting bagi menangani tekanan kerja, kos sara hidup, dan mengurangkan kadar peletakan jawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *