அடுத்த வார இறுதியில் ஆலங்கட்டி மழை பொழியவும் வாய்ப்பு - மெட் மலேசியா!

- Muthu Kumar
- 13 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 12:
அடுத்த வார இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றத்தை மலேசியா சந்திக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு வரும், குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் பருவமழை மாற்றக் கட்டத்தில் இதுபோன்ற வானிலை நிலவும் என்று அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
காலையில் தெளிவான மற்றும் வெப்பமான வானிலை வெப்பச்சலன செயல்பாட்டை அதிகரிக்க்கும். பிற்பகல் வேளையில், பெரிய மேகங்கள் பலத்த மழை மற்றும் பலத்த காற்றை உருவாக்கலாம், சில சமயங்களில் ஆலங்கட்டி மழை பொழியவும் வாய்ப்புள்ளதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது!
MetMalaysia menjangkakan peralihan monsun bermula hujung minggu depan, membawa hujan lebat, ribut petir, dan angin kencang, terutamanya di Semenanjung Malaysia. Cuaca pagi yang cerah meningkatkan aktiviti perolakan haba, menyebabkan hujan lebat dan hujan batu pada sebelah petang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *