செய்தியாளர் நந்தகுமார் மீது நாளை குற்றச்சாட்டு!

- Muthu Kumar
- 13 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 13-
இருபதாயிரம் வெள்ளி கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் “மலேசியாகினி செய்தியாளர் பி.நந்தகுமார் மீது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை குற்றம் சுமத்தப்படும்.
தம்மீது லஞ்சக் குற்றம் சுமத்தப்படவிருப்பது குறித்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் நேற்று பிற்பகலில் தம்மிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். அக்குற்றச்சாட்டை அவர் ஏற்கெனவே மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்கு என்னுடைய வாயை அடைக்கும் முயற்சியே இது என்று மலேசியாகினி இணையப் பத்திரிகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நந்தகுமாருக்கு மலேசியாகினி தொடர்ந்து துணை நிற்கும் என்று மறுவுறுதி அளித்த அந்த இணையப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஆர்கே ஆனந்த், குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதியே என்று வலியுறுத்தினார். வெளித்தரப்பினருடன் உள்நிலை புலன்விசாரணையை நாங்கள் நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவுகள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று ஆனந்த் குறிப்பிட்டார்.
மார்ச் முதல் தேதியன்று தாம் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் குறித்து மார்ச் 7ஆம் தேதியன்று மலேசியாகினி பத்திரிகையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.பாகிஸ்தானியர் ஒருவரிடமிருந்து தாம் ஒரு லட்சம் வெள்ளிக்குப் பேரம் பேசியதாகவும் அதன் பிறகு அது இருபதாயிரம் வெள்ளியாகக் குறைக்கப்பட்டது என்றும் மூத்த பத்திரிகையாளரான நந்தகுமார் கூறியிருந்தார்.
அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கும்பலின் நடவடிக்கையை அம்பலப்படுத்துவதற்காக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநருடன் இணைந்து செயல்பட்டு வந்தது தவிர வேறு எதுவும் தமக்குத் தெரியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்
Wartawan Malaysiakini, P. Nandakumar, akan didakwa di Mahkamah Majistret Putrajaya esok atas tuduhan menerima rasuah RM20,000. Beliau menafikan tuduhan itu dan mendakwa ia usaha menutup pendedahannya mengenai rasuah. Malaysiakini menyatakan sokongan kepadanya sehingga kes terbukti di mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *