பத்திரிகையாளர் நந்தகுமார் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

- Muthu Kumar
- 14 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 14:
மலேசியாகினியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பி.நந்தகுமார், வெளிநாட்டு முகவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கும்பல் பற்றிய கட்டுரைகளைப் பதிவேற்றவோ அல்லது வெளியிடவோ கூடாது என்பதற்காக பாகிஸ்தானிய நாட்டவரிடமிருந்து பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 இன் கீழ் பி. நந்தகுமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.இந்த குற்றம் இங்குள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், நந்தாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் நந்தாவுக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன்10,000 வெள்ளி ஜாமினை நீதிமன்றம் அனுமதித்தது.வழக்கு முடியும் வரை நந்தா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாதத்திற்கு ஒரு முறை MACC அலுவலகத்தில் ஆஜராகவும் நீதிபதி நசீர் நோர்டின் உத்தரவிட்டார்.வழக்கு மேலாண்மைக்காக ஏப்ரல் 23 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
Wartawan Malaysia, P. Nandakumar, didakwa di Mahkamah Seksyen Shah Alam atas tuduhan menerima rasuah RM20,000 daripada ejen asing untuk tidak menyiarkan artikel mengenai sindiket pekerja asing. Mahkamah membenarkan jaminan RM10,000 dengan syarat pasport diserahkan dan perlu melapor diri ke pejabat MACC setiap bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *