உரிமை கட்சி அரசாங்கத்தை அமைதியிழக்கச் செய்துவிட்டது!

- Muthu Kumar
- 14 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14:
அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற உரிமை கட்சியின் மேல்முறையீட்டை உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நிராகரித்துவிட்டதாக அதன் தலைவர் பி. ராமசாமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சங்கங்களின் பதிவிலாகாவான RoS தெரிவித்தது. அதனை அடுத்து பிப்ரவரி 27 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க கட்சிக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், முறையான நடைமுறையின்படி, தாங்கள் அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ததாகவும், ஆனால் நீதிமன்ற விசாரணை தொடரும் முன்பே அவரது நிராகரிப்பு வந்துள்ளதாகவும் ராமசாமி குறிப்பிட்டார்.மார்ச் 7 ஆம் தேதியிட்ட கடிதத்தில், நிராகரிப்புக்கான எந்த காரணங்களையும் வழங்காமல், அமைச்சரின் முடிவை RoS இன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று ராமசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உரிமை கட்சியின் பதிவை நிராகரிப்பது அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களை உருவாக்கும் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்று பினாங்கு முன்னாள் துணை முதல்வரான ராமசாமி கூறினார்.
நிராகரிப்பு ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றாலும், வளர்ந்து வரும் உரிமை கட்சியின் அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தை அமைதியின்மைக்கு உள்ளாக்கியுள்ளது என்பது தெளிவாகிறது என்று அவர் மேலும் கூறினார்.
Permohonan rayuan Parti Urimai untuk didaftarkan sebagai parti politik telah ditolak oleh Menteri Dalam Negeri, Datuk Seri Saifuddin Nasution. Menurut pengerusi parti, P. Ramasamy, keputusan itu dibuat tanpa memberikan sebarang alasan. Urimai sebelum ini mendapat kebenaran mahkamah untuk semakan kehakiman terhadap keputusan kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *