நோன்புப் பெருநாள்!20 விழுக்காட்டு தீயணைப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே விடுமுறை!

- Muthu Kumar
- 12 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 12-
மீட்பு நடவடிக்கை மற்றும் அவசரகால பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, 496 தீயணைப்பு உறுப்பினர்கள், அதிகாரிகளிலிருந்து, 20 விழுக்காட்டினரை மட்டுமே, இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கு விடுமுறை எடுக்க. மலாக்கா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு, மீட்பு நிலையங்களிலும், உறுப்பினர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதன் அம்மாநில இயக்குநர் முஹமட் ஃபிசார் அசிஸ் கூறினார்.
அவசர நேரத்தில் பயன்படுத்தப்படும் தளவாட உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதையும், தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அவற்றை எடுத்து கொண்டு செல்வதை, மலாக்கா மாநில ஜேபிபிஎம் உறுதி செய்து வருவதாக, முஹமட் ஃபிசார் விவரித்தார்.தீ விபத்துகள் மட்டுமின்றி சாலை விபத்துகள், வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் போன்ற பல்வேறு அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், மலாக்கா ஜேபிபிஎம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு நீண்ட விடுமுறை வழங்கப்படுவதால், தேவையற்ற சம்பவங்கள் நிகழாமல், பெருநாள் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறும் என்று தமது தரப்பு நம்புவதாகவும் முஹமட் ஃபிசார் கூறினார்.
Jabatan Bomba dan Penyelamat Melaka hanya membenarkan 20% daripada 496 anggota bercuti sempena Aidilfitri bagi memastikan operasi berjalan lancar. Semua peralatan dalam keadaan baik dan pasukan bersiap sedia menghadapi kebakaran, kemalangan jalan raya, banjir, serta insiden lemas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *