எம்ஏசிசி இன்று இரண்டாவது நாளாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா,  மார்ச் 14:

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி இன்று இரண்டாவது நாளாக புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி காலை 8.46 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார். ஏற்கெனவே நேற்று ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையில் பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஊழல் தடுப்பு முகமையின் தலைமையகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.இந்நிலையில்,  நாளை காலை 9 மணிக்கு மீண்டும் அவர் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊழல் தடுப்பு ஏஜென்சியின் ஆதாரம் உறுதிப்படுத்தியது. 

இஸ்மாயிலிடம் எத்தனை நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.பிப்ரவரி 19 அன்று MACC ஆல் விசாரிக்கப்பட்ட இஸ்மாயில், பிப்ரவரி 22 அன்று வீட்டில் மயங்கி விழுந்தார் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரது முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீதான விசாரணையில் சந்தேக நபராக அவர் அழைக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட  நான்கு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் "பாதுகாப்பான வீடுகள்" என்று நம்பப்படும் மற்ற மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரிங்கிட் 17 கோடி கோடி  ரொக்கம் மற்றும் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக MACC முன்பு தெரிவித்தது.

Bekas Perdana Menteri, Ismail Sabri Yaakob, disoal siasat oleh SPRM untuk hari kedua berhubung kes rasuah dan penyelewengan wang. Beliau tiba di ibu pejabat SPRM pada 8.46 pagi dan dijangka dipanggil semula esok. Siasatan berkaitan rampasan RM170 juta dan 16kg emas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *